சென்னை : மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவி கீதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுடைய மனைவி திருமிகு. கீதா ராதா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி திருமிகு.ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement