சென்னை: முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றுள்ளனர். முதல் மூன்று இடம்பிடித்த மாவட்டங்களுக்கு கோப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். 281 பதக்கங்கள் வென்று சென்னை முதலிடம் பிடித்தது. 36 தங்கம் உள்ளிட்ட 88 பதக்கங்களுடன் செங்கல்பட்டு 2-ம் இடம், 33 தங்கம் உள்ளிட்ட 95 பதக்கங்களுடன் கோவை 3-ம் இடம் பிடித்தது.
+
Advertisement