சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முத்தரசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசியிருக்கிறார்கள். முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடன் பிறப்பே வா சந்திப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களுடன் சந்திப்பு என்பது நடைபெற்றது. இந்த சந்திப்பு பொறுத்தவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா தொடர்பாக முதலமைச்சரிடம் நேரம் கேப்பதற்காக வந்திருப்பதாக போது முத்தரசன் தகவல் தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்குவதை ஒட்டி அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்காக வந்திருக்கிறார்களா என்று கூறப்பட்ட நிலையில், நூற்றாண்டு விழா தொடர்பாகவே முதலமைச்சரை சந்திக்க வந்திருப்பதாக முத்தரசன் கூறினார்.
இதற்கு முன்பாக காங்கிரஸ் பொறுத்தவரை, காங்கிரஸ் அவர்களோடு தொகுதி மற்றும் கூட்டணி பேச்சுவார்தைக்கான குழு அமைக்கப்பட்டியிருக்கக்கூடிய நிலையில், அவர்கள் இதற்கும் முன்பாகவே வந்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து இருந்தார்கள். அந்த அடிப்படையில் இந்த சந்திப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் அவர்களிடம் கேட்கும் போது நூற்றாண்டு விழா தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்று இருப்பதாக முத்தரசன் கூறினார். இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூட்டணி கட்சி பேச்சுவார்த்தையா அல்லது நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா குறித்தான பேச்சு வார்த்தையா என்பது தெரியவரும்.


