சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் பேரன் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் திறப்புக்கு வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
"ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத்தில்
பெரியார் படம்
திறக்கப்பட்டிருக்கிறது.
இது
பெரியாருக்கு வரலாறு;
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினுக்கும் வரலாறு.
இதன்மூலம்
பெறப்படும் செய்திகள் மூன்று.
ஆசியாவின் சாக்ரடீசை
ஐரோப்பா நினைவுகூர்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெரியாரின் பேரன் என்பது
மெய்ப்பிக்கப்படுகிறது.
பெரியார் என்ற தத்துவம்
இடம் கடக்கும்
காலம் கடக்கும்
இனம் கடக்கும்
என்பது மெய்யாகிறது
முதலீடுகளை
ஈர்க்கப்போன இடத்தில்
முதலீடு செய்கிறார் முதலமைச்சர்
சிந்தை அணு ஒவ்வொன்றும்
சிலிர்த்து நிற்கிறோம்;
வாழ்த்துகிறோம்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.