பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் திருமண மண்டபம் அமைக்கப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ராமநாதபுரம் : பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், "1974ல் பசும்பொன் தேவர் மணிமண்டபத்தை கட்டிக் கொடுத்தவர் கலைஞர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழை போற்றியவர் கலைஞர்,"இவ்வாறு தெரிவித்தார்.
