சென்னை: கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார். செல்வகுமாருடன் கலப்பை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். தவெக தலைவர் விஜய் நடித்த புலி திரைப்படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார். விஜய் நடித்த சுறா, வில்லு, போக்கிரி உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் பிஆர்ஓ-வாக பி.டி.செல்வகுமார் பணியாற்றியவர். விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் பி.டி.செல்வகுமார்.
ரசிகர்களுக்கு விஜய் முக்கியத்துவம் தரவில்லை
விஜய் மக்களுக்கு சேவையாற்றி அவர்களது தேவையை பூர்த்தி
செய்யமாட்டார். ரசிகர்களுக்கு விஜய் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று பி.டி.செல்வகுமார் குற்றச்சாட்டு வைத்தார். விஜய் மக்கள் இயக்கத்திற்கு நான் ஒரு துணாக இருந்து பணியாற்றியுள்ளேன்.
விஜயின் தந்தைக்கே தவெகவில் மரியாதை இல்லை
விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கே தவெகவில் மரியாதை இல்லை. விஜய் மக்கள் இயக்கத்தில் கடுமையாக உழைத்த ரசிகர்களுக்கு தவெகவில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


