சென்னையில் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.42.45 கோடியில் தொல்காப்பியப் பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பூங்கா பகுதி 1, 2ஐ இணைத்து சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் குறுக்கே குழாய் கால்வாய்க்கு மாற்றாக 3 வழி பெட்டக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.