முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டம் தொடங்கியது..!!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டம் இன்று தொடங்கி உள்ளது. மாமல்லபுரத்தில் கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் பயிற்சி கூட்டம் நடைபெறுகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாத்து, 2026ல் 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க உறுதியேற்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து, தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதை மையமாக கொண்டு கூட்டம் நடத்தப்படுகிறது. இத்தகைய கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் என 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தை பொறுத்தவரை மக்களின் வாக்குரிமையை பறிக்க கொண்டு வரப்படும் எஸ்.ஐ.ஆர். குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜக அரசின் துரோகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்தும். ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து 2 அரை கோடி அளவிலான மக்களை சந்தித்ததற்கும். தமிழக அரசு செய்துள்ள மக்கள் நல திட்டங்களை வீடுவீடாக சென்று உறுதி படுத்துவதற்கான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஓட்டி அதற்கு தயாராகும் விதமாக பயிற்சி கூட்டம் அமைத்துள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் இதற்கென கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், வாக்காள பட்டியலில் உள்ள விவகாரம் தொடர்பாக திமுகவினர் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும். அடுத்தடுத்த பணிகளை எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
