ரூ.29.29 கோடி செலவில் 5 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: ரூ.29.29 கோடி செலவில் 5 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். கோயம்பேட்டில் குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகளை திறந்து வைத்தார். புழல், சேத்துப்பட்டில் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானங்கள் திறந்து வைக்கப்பட்டது. ஆவடி, அன்னனூர், கோணாம்பேடில் கூடுதல் பள்ளிக் கட்டடங்கள் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.


