எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சமுதாயத்தினர், தலித்துகளை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சமுதாயத்தினர், தலித்துகளை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். வாக்குத் திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாக்கிறார். ஆதாரமின்றி எதையும் கூறவில்லை; எதிர்க்கட்சி என்பதால் முழு ஆதாரத்துடன்தான் கூறுகிறேன். 100% ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டையே முன்வைக்கிறேன். கர்நாடக மாநிலம் அலந்த் சட்டமன்ற தொகுதியில் 6,018 வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளனர் என அவர் குற்றச்சாட்டியுள்ளார்.