சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க, நிபுணர் குழு அமைக்க ஐகோர்ட் முடிவு
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க, நிபுணர் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. குழுவில் இடம்பெற வேண்டியர்களின் பெயர்களை பரிந்துரைக்க மனுதாரர், அறநிலையத்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது. எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள மாட்டோம் என அளித்த உத்தரவாதத்தை மீறவில்லை எனவும் தீட்சிதர்கள் தரப்பு வாதம் முன்வைத்துள்ளனர்.