சிதம்பரம்: நடராஜர் கோயிலின் உள்ளே இருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடிமரத்தை மாற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வருகை புரிந்துள்ளனர். அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட துணை ஆணையர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை புரிந்துள்ளனர்.
கோவிந்தராஜ பெருமாள் கொடி மரத்தை தற்போது உள்ளதை போல மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. புதிய கொடிமரம் மாற்றுவதற்கு கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறநிலையத்துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் இடையே வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். வாக்குவாதத்தை தொடர்ந்து இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்


