சென்னை : சென்னை விமான நிலையத்தில் தூர்நாற்றம் வீசியதாக பதிவிட்ட ப.சிதம்பரத்திடம் வருத்தம் தெரிவித்து நிர்வாகம் பதில் அளித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் டெர்மினல் 4 பகுதியில் சுகாதாரமின்றி இருப்பதை நேரில் பார்த்த ப.சி. எக்ஸில் பதிவிட்டிருந்தார். சர்வதேச தரத்திலான விமான நிலையம் இப்படி சுகாதாரமின்றி இருக்கிறதே என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி இருந்தார். தங்கள் வருகைக்கு 10 நிமிடம் முன்புதான் குப்பை வண்டி சென்றதால் தூர்நாற்றம் வீசியது என நிர்வாகம் ப.சி.க்கு பதில் அளித்துள்ளது.
+
Advertisement


