பிஜப்பூர்: சட்டீஸ்கரில் நக்சல் பாதிப்பு அதிகமுள்ள பஸ்தர் பகுதியில் 10 ஆயிரம் ரேடியோக்களை மத்திய ரிசர்வ் போலீஸ் இலவசமாக வழங்கி உள்ளது. இதுகுறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் கூறுகையில், “சட்டீஸ்கரில் மார்ச் 2026க்குள் நக்சலிசத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் இலக்கை அடைய மத்திய ரிசர்வ் போலீஸ் படை செயலாற்றி வருகிறது. நக்சல் பாதிப்பு குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு தேசிய நலன் பற்றி சிந்தனையை பரப்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ” என்று தெரிவித்தனர்.
+
Advertisement