ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் ரூ.2500கோடி மதுபான ஊழல் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் ஜூலை மாதம் 18ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சடடீஸ்கர் ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர். சிறையில் உள்ள அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மதுபான ஊழல் தொடர்பாக அவரும் மற்றொரு குற்றவாளியான திபென் சாவ்டாவும் கைது செய்யப்பட்டார்.