Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சத்தீஸ்கர் மருத்துவமணையில் போலி நோயாளிகள்: கிராமத்தினருக்கு ரூ .150 கொடுத்து நடிக்க வைப்பு

சத்தீஸ்கர் : சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செயல்பட்டுவருகிறது ஸ்ரீம்சர் என்ற தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இந்த மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகள் தீடிரென ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த நோயாளிகளிடம் அவர்களுக்கு ஏற்பட்டுயுள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்துள்ளனர்.

இதில் அவர்கள் முன்னுக்கு பின் தகவல்களை தெரிவித்தனர் இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அங்கு இருந்த மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர் ஆனால் அவர்களும் வாய்க்கு வந்தபடி உளறினர். இதன் பின் நடத்த பட்ட விசாரணையில் மொத்த மோசடியும் அம்பலம் ஆனது ஸ்ரீசம் மருத்துவ கல்லூரியில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நாள் அன்று கிராம மக்களை நோயாளிகள் போல நடிகவைத்து ஏமாற்றிவந்தது தெரியவந்தது.

இதன் படி காலையில் அந்த கல்லூரியின் வாகனம் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அங்கு கிராம மக்களிடம் ஒரு நாள் நோயாளிகள் போல நடித்தால் 150 ரூபாய் தருவதாக குறி அழைத்து வரப்படுவர் பின்னர் அவர்களை நோயாளிகள் போல படுக்கைகளில் படுக்கவைத்து அதிகாரிகளை ஏமாற்றிவிடுவது பழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் அந்த மருத்துவ கல்லூரியில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையிலும் இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் முழு நேரம் மருத்துவர்களாகவும் நடிக்கவைத்துள்ளார் பொதுவாக ஒரு மருத்துவ கல்லூரி செயல்படவேண்டும் என்றல் அதற்கு கட்டாய மருத்துவமனை இருக்கவேண்டும் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஏற்றவாறு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கைகளும் இருக்க வேண்டும் மேலும் அதில் நோயாளிகள் இருந்தால் மட்டுமே அந்த மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ளமுடியும் நோயாளிகள் இல்லாத பட்சத்தில் இந்த மோசடி வேளைகளில் தனியார் மருத்துவகல்லூரிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதே போன்ற மோசடியை தான் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியும் செய்து சிக்கலில் சிக்கி உள்ளது. இந்த மோசடியில் அதிகாரிகளுக்கும் லட்ச கணக்கில் பணம் கைமாறியுள்ளது தெரியவந்ததால் இந்த வழக்கு சிபிஐ க்கு மாறியது அவர்கள் நடத்திய விசாரணையில் மோசடி உறுதி ஆனாதை அடுத்து தனியார் கல்லூரியின் தலைவர் ரவிசங்கர் மகராஜ் கல்லூரி இயக்குனர் அதில்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்களையும் கைதுசெயும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் சத்தீஸ்கரில் நடைபெற்ற இந்த மோசடி செயல்கள் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை அம்பலம்படுத்தி உள்ளது.