Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டீஸ்கரில் 3 நக்சல்கள் பலி

பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இரண்டு நக்சல்களுக்கும் ரூ.16லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் நேற்றும் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு 12-போர் துப்பாக்கி, ஒரு பீப்பாய் கையெறி ஏவுகணை வெடிபொருட்கள் மற்றும் பிற மாவோயிஸ்ட் தொடர்பான பொருட்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.