சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி வேலை செய்யாததால் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்!
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்பட்ட 'சேரன் எக்ஸ்பிரஸ்' ரயிலில் ஏ.சி வேலை செய்யாததால் பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம் செய்ததை அடுத்து உடனடியாக பழுது சரிசெய்யப்பட்டது. இதனால் இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 10.55-க்கு புறப்பட்டுச் சென்றது.