சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று மணலி மண்டலம் வார்டு-20ல் வ.உ.சி. மைதானம், ராயபுரம் மண்டலம் வார்டு-55ல் ஏழுகிணறு மாநகராட்சி சமுதாயக் கூடம், திரு.வி.க.நகர் மண்டலம் வார்டு-76ல் ஸ்டாரன்ஸ் சாலையில் உள்ள மண்டல அலுவலகம், அண்ணாநகர் மண்டலம் வார்டு-101ல் ஷெனாய் நகர் அம்மா அரங்கம், தேனாம்பேட்டை மண்டலம் வார்டு-125ல் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி உள்ளரங்கம், கோடம்பாக்கம் மண்டலம் வார்டு-140ல் எஸ்.வி. நாகரத்தினம்மாள் திருமண மண்டபம், வளசரவாக்கம் மண்டலம் வார்டு-145ல் நெற்குன்றம் வெங்காய மண்டி மைதானம், ஆலந்தூர் மண்டலம் வார்டு-156ல் முகலிவாக்கம் சமுதாயக் கூடம், சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு-193ல் துரைப்பாக்கம், சி.எல்.மேத்தா கல்லூரி ஆகிய 9 வார்டுகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.
+
Advertisement