திண்டுக்கல்: சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. நள்ளிரவு 11 மணியளவில் திண்டுக்கல் வந்த ரயிலில், ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கன்னியாகுமரியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (44) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி ரூ.13 லட்சத்து 76 ஆயிரம் வைத்திருந்தது தெரிந்தது. வெளிநாட்டு கரன்சியை சென்னையில் மாற்றியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பணத்தை பறிமுதல் செய்து, வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். ெதாடர்ந்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement