சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் ராஜேந்திர ரத்னு. இவர், திடீரென விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாக தமிழக அரசிடம் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அவர் விருப்ப ஓய்வு பெற அனுமதி அளித்து உத்தரவிட்டது. இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 19770ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பிறந்த இவர், எம்ஏ, எம்பில் பட்டம் பெற்றவர், தமிழ், ஆங்கிலம், இந்தி, ராஜஸ்தானி மொழி தெரிந்தவர். 2001ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழக பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். தற்போது, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் மற்றும் நதிகள் உருமாற்ற நிறுவனத்தின் உறுப்பினர் செயலராக பணியாற்றி வந்தார். அவருக்கு தற்போது வயது 55. மேலும் 5 ஆண்டுகள் அவருக்கு பணிக்காலம் உள்ளது. ஆனால், திடீரென விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement