சென்னை: 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 111 சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்க 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 60 பேர், மாநில பேரிடர் மீட்புப் படையின் 30 பேர் தயார் நிலையில் உள்ளனர். மக்களுக்கு நோய்தொற்று ஏற்படாமல் தவிர்க்க 2755 நிலையான, நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது.
+
Advertisement

