சென்னை: தமிழக காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், காவலர்களின் குறைகளை 3 மாதத்துக்கு ஒரு முறை கேட்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனரின் எல்லைக்குட்பட்ட காவலர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று குறைகளை கேட்கிறார்.
அதில் பணி மாற்றம், வீடு மாற்றம் அல்லது வேண்டும் என்பவர்கள், தண்டனை ரத்து உள்ளிட்ட குறைகளை கேட்டு தீர்வு வழங்குகிறார். அதைத் தொடர்ந்து நாளை, சென்னை கமிஷனரின் எல்லைக்குட்பட்ட அதிகாரிகளிடம் குற்றங்கள் குறித்தும், குற்றங்களை தடுப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை போலீஸ் கமிஷனரின் எல்லைக்குள், டிஜிபி ஆய்வு நடத்துவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.