சென்னை: டபிள்யுடிஏ சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் இன்று முதல் சென்னையில் துவங்குகின்றன. 3 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நடக்கும் இப்போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகள் பட்டியலை இறுதி செய்யும் பணி நேற்று நடந்தது.
அதன்படி, தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் ரேவதி, வைல்ட் கார்ட் மூலம் சிறப்பு தேர்வாக, உலகின் 388ம் நிலை வீராங்கனை ஸ்ரீவள்ளி பாமிதிபதி ஆகிய இருவரும் முதல் சுற்றில் நேரடியாக மோதவுள்ளனர். இதன் மூலம், இவர்களில் ஒருவர் 2ம் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை உருவாகி உள்ளது.
