சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் பெண்களுக்கான சர்வதேச டபிள்யூ டி ஏ சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஒற்றை பிரிவில் காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் லிண்டா ஃபுருத்ரோவா(செக் குடியரசு), இந்தோனேஷியாவின் ஜான்சி ஜன் ஆகியோர் மோதினர். இதில், 6-2,3-6,2-6 என்ற கணக்கில் கைப்பற்றி ஜான்சி ஜன் காலிறுதிக்கு முன்னேறினார். நடப்பு சாம்பியன் லிண்டா ஏமாற்றத்துடன் வெளியேறினார். மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் குரேஷியாவின் டோனா வேகிக் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் இந்தியாவின் ஷஹஜா எமலபள்ளியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.
+
Advertisement 
 
  
  
  
   
