சென்னை: சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடித்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை (டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடித்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நீடிக்கிறது. அடுத்த 6 மணி நேரத்துக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும். சென்னைக்கு 50 கி.மீ தூரத்தில் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும்போது நள்ளிரவு சென்னையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் நீடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

