Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை காமராஜர் அரங்கத்தில் திருமாவளவன் பிறந்தநாள் விழா: கமல்ஹாசன் நேரில் வாழ்த்து

சென்னை: சென்னை காமராஜர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. மநீம தலைவர் கமல்ஹாசன் எம்பி வாழ்த்துரை வழங்கினார். நள்ளிரவில் தொண்டர்கள் மத்தியில் திருமாவளவன் கேக் வெட்டினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பியின் பிறந்தநாளை தமிழர் எழுச்சி திருநாளாக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று அவருக்கு 63 வயது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை காமராஜர் அரங்கில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு விடு­தலை சிறுத்­தை­கள் கட்சி தலை­வர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செய­லா­ளர்­கள் ம.செ.சிந்­தனை செல்­வன், து.ரவிக்­கு­மார், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாந­வாஸ், பனை­யூர் பாபு முன்­னி­லை­ வகித்தனர். பிறந்தநாளையொட்டி ஸ்டீபன் ராயல் குழுவினரின் இசை பாய்ச்­சல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஜாஹிர் உசேன் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடந்தது.

கவி­ய­ரங்க நிகழ்ச்­சியை இயக்­கு­நர் நடிகர் கே.பாக்­ய­ராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார். நி­கழ்ச்­சிக்கு கவிஞர் விவேகா தலைமை வகித்தார். விசிக துணைப் பொதுச் செய­லா­ளர் வன்னியரசு வரவேற்பு கவிதை வாசித்தார். இதில் கவி­ஞர்­கள் ஆண்­டாள் பிரி­ய­தர்­ஷினி, இளைய கம்­பன், தஞ்சை இனி­யன், அருண்­பா­ரதி, லாவ­ர­தன், புனித ஜோதி ஆகியோர் கவிப்பொ­ழிவு நிகழ்த்­தினர். பின்னர் ஊடக அரங்­கத்­தில் ‘மதச்­சார்­பின்மை காப்­போம்’ என்ற தலைப்­பில் ஊடக அரங்கம் நடந்தது. இதில் ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.

பின்னர் நடந்த வாழ்த்தரங்கத்தில் மக்­கள் நீதி மய்யம் தலை­வர் நடிகர் கமல்­ஹா­சன் எம்பி, தமிழ்­நாடு பாட­நூல் கழக தலை­வர் ஐ.லியோனி, முன்னாள் ஏடிஜிபி வே.வனிதா, திரைப்­பட இயக்­கு­நர் லட்­சுமி ராமகிருஷ்ணன் வாழ்த்­தி பேசினர். நள்ளிரவு 12 மணியளவில் திருமாவளவன் பிறந்தநாள் கேக் வெட்டி தொண்டர்களுக்கு ஊட்டினார். திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் வந்திருந்தனர்.

இன்று ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இன்று காலையில் அம்பேத்கர் சிலை, பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து திருமாவளவன் மரியாதை செலுத்துகிறார்.