Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை கலைவாணர் அரங்கில் 8ம் தேதி பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 8ம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, செய்தி மக்கள் தொடர்பு துறை, மருத்துவம் மற்றும், மக்கள் நல்வாழ்வு துறை சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து அச்சு ஊடகம், காட்சி ஊடகம், செய்தி முகமை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதன்மை செய்தியாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கின்றனர்.

இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் வருகிற 8ம் தேதி (சனிக்கிழமை) சென்னை, கலைவாணர் அரங்கில் காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கிறது. முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீரகம், எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்த பரிசோதனை, காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், இதய மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும்.