சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. அதாவது கடந்த 14ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.1,280, 15ம் தேதி ரூ.1,520 என குறைந்தது. 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் விலையில் எந்தவித மாற்றம் ஏற்படவில்லை.
தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.11,400க்கும், பவுனுக்கு 1,120 குறைந்து ஒரு பவுன் ரூ.91,200க்கும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.173க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும் நிலையில், இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


