சென்னை: சென்னையில் உள்ள 9 தூதரகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். சென்னையில் உள்ள சிங்கப்பூர், கொரியா, சுவீடன், ஆஸ்திரேலியா, ரஷ்ய தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் உதவியுடன் தூதரகங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement