சென்னை: சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 21 வாகனங்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை சோதனை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கீழ்பாக்கத்தில் இரும்பு வியாபாரம் செய்யும் நிர்மல்குமார் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் பகுதியில் தொழிலதிபர் கலைச்செல்வன் வீட்டில், சென்னை கே.கே.நகரில் தங்க வியாபாரி சேட் என்பவர் வீட்டில், சென்னை அம்பத்தூரில் வழக்கறிஞர் பிரகாஷ் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.


