சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, காசியாபாத் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள், கொல்கத்தா, புனே, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட 6 வருகை விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்ப்பட்டன.
சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.10 மணிக்கு புனே செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 3.55 மணி சென்னை- அகமதாபாத், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 5.25 மணி சென்னை- மும்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 5.25 மணி சென்னை- காசியாபாத் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதிகாலை 5.55 மணி சென்னை-டெல்லி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 8.15 மணி சென்னை- கொல்கத்தா இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
அதுபோல், சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் அதிகாலை 1.15 மணி கொல்கத்தா-சென்னை ஸ்பைஜெட் பயணிகள் விமானம், அதிகாலை 2.10 மணி புனே-சென்னை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதிகாலை 5.15 மணி புனே-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 7.35 மணி கொல்கத்தா-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 9.25 மணி அகமதாபாத்-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.25 மணி மும்பை- சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த விமானங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் பயணம் செய்வதற்கு விமான டிக்கெட்கள் மாற்றி கொடுக்கப்பட்டதாகவும் விமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
