சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்த 10 விமானங்கள், தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. கொச்சி, தூத்துக்குடி, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டன.
+
Advertisement