Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அஜித்குமார் மரணத்தை கண்டித்து சென்னையில் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம்: நெரிசலில் சிக்கி ரசிகர்கள் மயக்கம்

சென்னை: காவலாளி அஜித் குமார் மரணத்தை கண்டித்து சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் தொண்டர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியான அஜித் குமார் மரண வழக்கு உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வலியுறுத்தியும், காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், தவெக சார்பில் நேற்று சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காலை முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். தொண்டர்களுக்கு தனியாக, நிர்வாகிகளுக்கு தனியாக என தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. தொண்டர்களுக்கு அமைக்கபட்டு இருந்த பகுதிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக பெண் தொண்டர்கள் சிக்கி அவதி உள்ளாகியுள்ளனர். மேலும் நெரிசலில் சிக்கியதால் சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்களை அங்கு இருந்த பாதுகாவலர்கள் மற்றும் தொண்டர்கள் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். சிலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதுமட்டுமின்றி சில தொண்டர்கள் சாலை ஓரத்தில் உள்ள சுவர்கள் மீதும், மரத்தின் மீதும் ஏறி பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசுகையில், ‘‘அஜித் குமார் சாதாரண, எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்; அஜித் குமார் இறப்புக்கு அளித்த நிவாரண நிதியை போல, காவல் மரணத்தால் பாதிக்கப்பட்ட 24 பேர் குடும்பத்திற்கும் நிதிஉதவி அளிக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. எனவே தவறை எல்லாம் சரி செய்ய வேண்டும்’’ என்றார்.

* கட்சிக்கொடி பைப்புகளை காணோம்

அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தின் போது அக்கட்சி கொடிகள், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் சுற்றி வைப்பார்கள். அதேபோல நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திலும் தவெக கொடி சிவானந்தா சாலையில் முழுவதும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டர்கள் கொடிகள் கட்டப்பட்டுந்த இரும்பு பைப்புகளை எடுத்து சென்றதாக கொடி பைப் வைத்த உரிமையாளர் குற்றஞ்சாட்டினார். மேலும் 150 கொடிகள் கட்டப்பட்டு இருந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட பைப்புகளை காணவில்லை என வேதனையுடன் அவர் தெரிவித்தார்.

* பொதுச்சொத்து சேதம்

தவெக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜயை பார்க்க முண்டியடித்த சென்ற தொண்டர்களால் சாலை நடுவே உள்ள தடுப்புகள் சேதம் அடைந்துள்ளது. சாலை நடுவே இருந்த ஸ்டீல் பைப்புகள் மீது தொண்டர்கள் ஏறியதில், அனைத்தும் சேதம் அடைந்து சாலையில் உடைந்து கிடந்தது.