சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று 11 வார்டுகளில் நடைபெறுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று திருவொற்றியூர் மண்டலம் 1, வார்டு 1ல் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கத்திவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம், மாதவரம் மண்டலம் 3, வார்டு 24ல் புனித அந்தோணி நகர் ஜி.என்.டி சாலையில் உள்ள தியா கல்யாண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம் 4, வார்டு 38ல் தண்டையார்பேட்டை, பட்டேல் நகர் சென்னை உயர்நிலைப் பள்ளி, ராயபுரம் மண்டலம் 5, வார்டு 62ல் சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் சாலையில் உள்ள மே தின விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
மேலும் திரு.வி.க.நகர் மண்டலம் 6, வார்டு 64ல் ஸ்ரீநிவாசன் நகரில் உள்ள பழைய பள்ளிக் கட்டடம், அம்பத்தூர் மண்டலம் 7, வார்டு 85ல் உள்ள டன்லப் கிரவுண்ட், அண்ணாநகர் மண்டலம் 8, வார்டு 105ல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள முகமது சதக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம் 9, வார்டு 126ல் மந்தைவெளி, கேனல் பங்க் சாலை, அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கம், அடையாறு மண்டலம் 13, வார்டு 168ல் கிண்டி, லேபர் காலனி, அருளயம்மாபேட்டை பிரதான சாலையில் உள்ள லயன்ஸ் கிளப் தொடக்கப்பள்ளி, பெருங்குடி மண்டலம் 14, வார்டு 184ல் அம்பேத்கர் நகர், பரணி தெரு, எம்.ஜி.ஆர்.சாலையில் உள்ள நாகம்மை அடிகளார் பள்ளி, சோழிங்கநல்லூர் மண்டலம் 15, வார்டு 197ல் பனையூர், குடுமியாண்டி தோப்பு பள்ளி பிரதான சாலையில் உள்ள சுனாமி கட்டட பள்ளி வளாகம் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.