சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.78,440க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. கடந்த 6ம் தேதி ஒரு சவரன் ரூ.75,000 மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து காணப்பட்டது.
அதன்பின்பு கடந்த 21ம் தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது. அதாவது, கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 வரை உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,805க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.78,440க்கு விற்பனையாகிறது. இதே ஏறுமுகம் நீடித்தால் தங்கம் ஒரு சவரன் ரூ.79 ஆயிரத்தை விரைவில் தொட்டுவிடும். இதையடுத்து சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.137க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஏழு நாள் தங்கம் விலை நிலவரம்:
02.09.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.77,800
01.09.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.77,640
31.08.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.76,960
30.08.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.76,960
29.08.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.76,280
28.08.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.75,240
27.08.2025- ஒரு சவரன் (22 காரட்) ரூ.75,120