சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.
+
Advertisement
