சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் தாய்க்கு சொந்த ஊரில் பணி மாறுதல் வழங்க திருமாவளவன் கோரிக்கை வைத்தார். கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார். கொரோனா காலத்தில் பணியாற்றிய 1,000 செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
+
Advertisement