சென்னை: கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடை உரிமையாளரின் ஊழியரை மறித்து ரூ.45 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. செப்டம்பர் 22ல் வசூலித்த ரூ.45.68 லட்சத்துடன் நாராயணன் பைக்கில் சென்றபோது கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டனர். விரட்டிச் சென்றபோது வளசரவாக்கம் கங்கா நகரில் பைக்கை கீழே போட்டுவிட்டு 2 பேரும் தப்பிச் சென்றனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது நெல்லையைச் சேர்ந்த காஜா மெய்தீனின் பைக் என்பது தெரியவந்தது. நெல்லையைச் சேர்ந்த அய்யப்பன் என்கிற ரமேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement