சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.11,800க்கும் சவரன் ரூ.94,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாள் அதிரடியாக குறைவதும், அதே வேகத்தில் மறுநாள் உயருவதுமாகவும் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் காலை, மாலை என கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்தது. நேற்று காலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ. 173க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று பண்டிகை நாட்கள் வருகிறது.
இந்த நேரத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.11,800க்கும் சவரன் ரூ.94,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.9 உயர்ந்து ரூ.182க்கு விற்பனையாகிறது.
