Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் நாளை (30.8.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..!!

சென்னை: சென்னையில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. போரூர் பகுதியில், முத்து நகர், மேக்ஸ்வொர்த் நகர், பங்களா தூபி, மாதா நகர், பொன்னியம்மன் கோவில் தெரு,கிருஷ்ணா நகர், லலிதா நகர், ராஜேஸ்வரி அவென்யூ, ஈவிபி சந்தோஷ் நகர் உள்ளிட்ட இடங்களிலும்.

திருவேற்காட்டில் பருத்திப்பட்டு, கோலடி, பெருமாளாகரம், வேலப்பஞ்சாவடி, மாதர்வேடு, கூட்டுறவு நகர், சண்முகா நகர், புளியம்பேடு, பி.எச்.ரோடு, நூம்பல், பரிவாக்கம், கண்ணபாளையம், காடுவெட்டி, வீரராகவபுரம், குப்புசாமி நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகள்.கிண்டியில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோவில் 1 முதல் 5வது தெரு, ஏ முதல் டி பிளாக், பூமகள் தெரு, சௌத் கட்டம், மவுண்ட் ரோடு, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர் உள்ளிட்ட பகுதிகள்.

கீழ்ப்பாக்கத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், ஓசங்குளம், நியூ பூபதி நகர், பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, மற்றும் கெங்குரெட்டி சாலை.பாரிவாக்கத்தில் கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி.ஈஞ்சம்பாக்கத்தில் பி.ஜே.தாமஸ் அவென்யூ, அண்ணா என்கிளேவ், ஈசிஆர் மெயின் ரோடு, சாய்பாபா கோவில் தெரு, ராயல் என்கிளேவ், 1, 2வது அவென்யூ, வெட்டுவாங்கேணி, ஸ்வஸ்திக் அவென்யூ,ஆலிவ் பீச் ஹனுமான் காலனி, கிளாசிக் என்கிளேவ், ராஜன் நகர், செல்வா நகர், பிராத்தனா பார்க் அவென்யூ, குப்பம் நகர், சரவண நகர், செங்குன்றம் கார்டன்.

பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, பெரியார் சாலை, தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், கோவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கஜூரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர்,செயலக காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், இ.காந்தி நகர், பால்ராஜ் நகர், வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர் மற்றும் ரூகி வளாகம் உள்ளிட்ட இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்த உடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தது.