2021 ஆம் ஆண்டுக்கு முன்பு 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பல்துறைகளில் தமிழ்நாடு பின்தங்கியிருந்தது. இன்று எங்கும், எதிலும் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறி இருக்கிறது. கல்வி, தொழில்துறை, உயர் கல்வி உள்ளிட்ட அத்தனை துறைகளிலும் நம்பர் 1 இன்று தமிழ்நாடு தான். இந்திய அளவில் அத்தனை துறைகளிலும் நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது தமிழ்நாடு.
அத்தனைக்கும் காரணம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அந்த ஒற்றைப்பெயரின் பின்புலத்தால், அவரது அயராத உழைப்பால், துறை ரீதியான கண்காணிப்பால் இன்று தமிழ்நாடு இந்த சிகரத்தை தொட்டு இருக்கிறது. இவை அத்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல் படிப்பை முடித்து விட்டு புதிதாக வேலையில் சேருவோருக்கு அதிக சம்பளத்தை அள்ளித் தரும் பெருநகரங்களில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் எங்கு வேலைக்கு சென்றாலும், அதிக சம்பளம் தரும் நகரமாக இதுவரை இருந்து வந்தது தொழில் நகரமான மும்பை தான். அங்கு தான் அனைவருக்கும் வேலை, அதிக சம்பளம், அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இன்று அத்தனையும் அப்படியே நம்ம சென்னைக்கு வந்து இருக்கிறது. காரணம் இந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அயராத உழைப்பு தான் காரணம். அதனால் தான் இந்தியாவின் சம்பள கட்டமைப்பில் முதல் இடத்தை நம்ம சென்னை பிடித்து இருக்கிறது.
அதனால் தான் அத்தனை மாநிலங்களில் இருந்தும் கல்வி, மருத்துவம், வேலைக்காக தமிழ்நாட்டை நோக்கி மாணவர்களும், ஊழியர்களும் ஏன் நோயாளிகளும் கூட படையெடுத்து வருகிறார்கள். பலன் பெற்று திரும்புகிறார்கள். சென்னையின் தொழில் கட்டமைப்பு அந்த அளவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய பெருநகரங்களை காட்டிலும் சென்னையில் தான் புதிதாக வேலையில் சேருபவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
சென்னையில் தொடக்க நிலை ஊழியர்களுக்கு மாத சம்பளம் சராசரியாக ரூ.30,100 தரப்படுகிறது. சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக ப்ரஷ்ஷராக பணியில் சேருபவர்கள் ரூ.25,000 முதல் ரூ.30,500 வரை மாத சம்பளம் பெறுகின்றனர். இது, மும்பையில் ரூ.28,500 ஆகவும், டெல்லியில் ரூ.26,300 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.27,400 ஆகவும், பெங்களூருவில் ரூ.28,400 ஆகவும் உள்ளது.
மேலும், 2 முதல் 5 ஆண்டு வரை அனுபவம் கொண்ட நடுத்தர நிலை ஊழியர்களுக்கு ஐதராபாத்தில் (ரூ.47,200) அதிக சம்பளம் கிடைக்கிறது. இப்பிரிவில் சென்னையில் ரூ.46,600 சம்பளம் பெறுகின்றனர். 5 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சீனியர் லெவல் ஊழியர்கள் பிரிவிலும் ஐதராபாத் ரூ.69,700 சம்பளத்துடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னையில் சீனியர் ஊழியர்கள் சராசரியாக ரூ.66,400 சம்பளம் பெறுகின்றனர்.
சம்பள விகிதம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் வாழ்க்கை செலவு மற்றும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதற்கேற்ற சம்பளம் கிடைக்கும் நகரங்களுக்கு இளைஞர்கள் முக்கியத்துவம் தருகின்றனர். அந்த வகையில் இளைஞர்களின் நம்பர் 1 நகரமாக சென்னை மாறியிருக்கிறது.
டெல்லி, மும்பை, புனே, பெங்களூருவில் கூட இளைஞர்களுக்கு ஏற்ற வாய்ப்பு இல்லை. ஆனால் சென்னையில் தான் பெருநகரங்களில் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப சம்பளம் கிடைக்கிறது. அதனால் தான் சென்னை இன்று பெருநகரங்களின் நம்பர் 1 நகராக மாறியிருக்கிறது. இல்லை, இல்லை திமுக ஆட்சியால் மாற்றப்பட்டு இருக்கிறது.