சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 2025-26ம் ஆண்டில் ஒன்றிய அரசு ரூ.3000 கோடி நிதி விடுவிப்பு: ஆர்டிஐ தகவல்
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 2025-26ம் ஆண்டில் ஒன்றிய அரசு ரூ.3000 கோடி நிதி விடுத்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.8,445 கோடி நிதி ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டது. சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில், ரூ.3000 கோடி ஒதுக்கீடு என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்தது.