சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட எழும்பூர் பகுதியில் மறுசீரமைப்பு பணி : அகமதாபாத் -திருச்சி ரயில் சேவையில் மாற்றம்
திருச்சி: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட எழும்பூர் பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அகமதாபாத்-திருச்சி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அகமதாபாத் -திருச்சி சிறப்பு ரயில் வரும் 18ம் தேதி மற்றும் 25ம் தேதி, அக்டோபரில் 2, 9, 16, 23, 30ம் தேதி மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ரேனிகுண்டா, திருத்தணி, மேலப்பாக்கம், காட்பாடி ஜங்ஷன், வேலூர் கண்டோன்மெண்ட் வழியாக திருச்சிக்கு வந்தடையும்.
இதேபோல் திருச்சி-அகமதாபாத் சிறப்பு ரயில் வருகிற 21, 28ம் தேதி மற்றும் அக்டோபர் 5, 12, 19, 26ம் தேதிகள் மற்றும் நவம்பர் 2, 9ம் தேதிகளில் வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி ஜங்ஷன், மேலப்பாக்கம், திருத்தணி, ரேனிகுண்டா வழியாக அகமதாபாத் செல்லும். இந்த தகவல் திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.