சென்னை: சென்னை கொளத்தூரில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை எடுப்பதற்காக இறங்கிய தொழிலாளி ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் அடுத்த திருப்பதி நகரில் விஷவாயு தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் 2 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடைப்பை சரி செய்ய கால்வாயில் இறங்கிய குப்பன் என்பவர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் குப்பனை காப்பாற்ற முயன்ற சங்கர், ஹரி ஆகியோர் விஷவாயு தாக்கி மயங்கியதால் பெரியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சங்கர் என்பவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஹரி என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்த உடலை கைப்பற்றி பிரதாபரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.