சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஒரு வாரத்தில் இடம் ஒதுக்கப்படும் என சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள தெருக்களில் பட்டாசு விற்பனை செய்தவர்களுக்கு தனி இடம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் பதிலை ஏற்று வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.
+
Advertisement