Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் 15 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை: சென்னையில் 15 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் ெசய்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்ெபக்டராக இருந்த லலிதா நுண்ணறிவு பிரிவுக்கும், நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த அருள்மரிய அந்தோணிராஜ் நுண்ணறிவு பிரிவுக்கும், கோட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த முகேஷ்ராவ் நுண்ணறிவு பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த சுமதி வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,

நுண்ணறிவு பிரிவில் இருந்த ராஜா தரமணி சட்டம் ஒழுங்கிற்கும், அசோக்நகர் குற்றப்பிரிவில் இருந்த யமுனா பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், வளசரவாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் இருந்த செல்வக்குமாரி வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜன் கொத்தவால்சாவடி சட்டம் ஒழுங்கிற்கும், ஜெ.ெஜ.நகர் குற்றப்பிரிவிலிருந்த ராஜா நுண்ணறிவு பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவிலிருந்த செரினா கொடுங்கையூர் குற்றப்பிரிவுக்கும், மேற்கு சைபர் கிரைம் காவல் நிலையத்திலிருந்த சாந்தி தேவி அயனாவரம் குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆர்.கே.நகர் குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் அமலா ரத்தினம் நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த பணிநியமனம் ரத்து செய்யப்பட்டு ஆர்.கே.நகர் குற்றப்பிரிவிலேயே பணியாற்றுவார். பாண்டிபஜார் சட்டம் ஒழுங்கில் இருந்த வீரம்மாள் காசிமேடு குற்றப்பிரிவுக்கும், பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் இருந்த சிவா ஆனந்த் காத்திருப்போர் பட்டியலுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த வடிவேலன் வானகரம் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.