சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு கடற்கரையை நகர்ந்து, அடுத்த 2 நாள்களில் பரவலாக மழை பெய்யக் கூடும். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்தார்.
+
Advertisement