சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்.26, 27, 28ம் தேதிகளில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும். அக்.26ல் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
+
Advertisement