சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும்போது இதுபோன்ற திட்டங்கள் தேவை. நீர்நிலை அமைக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மூலம் சுற்றுச்சூழல் சமநிலை ஏற்படுவதோடு காற்று மாசை குறைக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

